10 ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட 89 வாகனங்கள் ரூ.14¼ லட்சத்துக்கு ஏலம்
10 ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட 89 வாகனங்கள் ரூ.14¼ லட்சத்துக்கு ஏலம்
ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. ஆகாஸ் குமார் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி நடவடிக்கையின்பேரில் ஈரோடு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை இ-ஏலம் விட முயற்சி செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 89 வாகனங்களை இ-ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஏலம் நேற்று நடந்தது. இதில் 76 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 11 நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய 89 வாகனங்கள் மொத்தம் ரூ.14 லட்சத்து 33 ஆயிரத்து 700-க்கு ஏலம் விடப்பட்டது.