பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார்
காளையார் கோவிலில் இன்று நடைபெறும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில், நாளை 221 வது நினைவு தினம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி, மணிவண்ணன் தலைமையில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளியூர் வாகனங்கள் வந்து செல்ல தனி, தனி வழித்தடங்களை பயன்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. வாகனங்களில் வெளிப்புறங்களில் தொங்கியபடி வருபவர்கள், மேற்கூரை மீது அமர்ந்துவருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வழித்தடங்களில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், இளையான்குடி, தேவகோட்டை தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டம் முழுவதுமுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய 5 சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, மோட்டார் வாகன அலுவலர் வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்பே அனுமதிக்கப்படும்.
டி.ஐ.ஜி மணிவண்ணன், மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 35 நான்குசக்கர ரோந்து வாகனங்களும் 42 இருசக்கர ரோந்து வாகனங்களும் சாலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.