பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி
x

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். ரெயில் நிலையத்தில் தீவிர வாகன சோதனை நடந்தது.

திருப்பூர்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். ரெயில் நிலையத்தில் தீவிர வாகன சோதனை நடந்தது.

தீவிர ரோந்துப்பணி

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வழிபாட்டு தலங்கள், அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இதுதவிர ரோந்து வாகனங்கள் மூலமாக போலீசார் ரோந்துப்பணியை மேற்கொண்டனர்.

மாநகர பகுதிகளில் சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மாநகரம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். திருப்பூர் ரெயில் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில்கள் மற்றும் ரெயில் பயணிகளிடம் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலமாக சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் மூலமாக பார்சல் பண்டல்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

போலீசார் குவிப்பு

திருப்பூரின் புறநகர பகுதிகளில் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். விடிய, விடிய வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். புறநகர பகுதிகளில் மாவட்ட காவல்துறை சார்பில் 1,350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாபர் மசூதி இடிப்பை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story