தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் பெண் உடல் மீட்பு கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
பென்னாகரம்:
பெரும்பாலை அருகே தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் பெண் உடல் மிதந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் உடல்
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே தொப்பையாறு மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்தனர்.
பின்னர் இதுகுறித்து பெரும்பாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்த பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.