ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை


ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
x
திருப்பூர்


திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடியரசு தினத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பலத்த சோதனை மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருப்பூர் ரெயில்வே போலீசார் சார்பில் நேற்று சோதனை நடைபெற்றது.

ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். முக்கியமாக ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும், பயணிகளின் உடைமைகளையும், பார்சல் சேவை அலுவலகத்திலும், வாகனங்கள் நிறுத்துமிடத்திலும் மெட்டல் டிடெக்டர் கருவி வைத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.


Next Story