மது விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை
மணல்மேடு பகுதியில் மது விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்
மயிலாடுதுறை
மணல்மேடு:
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே உள்ள கடைகளில் மதுக்கடை திறப்பதற்கு முன்பாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மல்லியகொல்லை டாஸ்மாக் அருகில் உள்ள கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த 4 மதுபாட்டில்களை கைப்பற்றினர். கடை உரிமையாளர் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது53) என்பவரை கைது செய்தனர். இதேபோல் நடராஜபுரம் பகுதியில் 4 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் பட்டவர்த்தி, ஆத்தூர் பாலம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி மதுபாட்டில்களை கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story