போதை ஆசாமி போல் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் ஏட்டு


போதை ஆசாமி போல் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் ஏட்டு
x

நன்னிலத்தில் போதை ஆசாமி போல் நடித்து போலீஸ் ஏட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவாரூர்

நன்னிலம்:

நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா முன்னிலையில் சன்னாநல்லூர் கடைதெருவில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் நன்னிலம் போலீஸ் ஏட்டு ரமேஷ் மது அருந்தியவர் போல் நடித்து சாலையில் வந்த வாகனத்தை மறித்தார். அப்போது எமதர்மராஜா வேடம் அணிந்த நாடக கலைஞர், போதை ஆசாமி போல் நடித்த ஏட்டு ரமேசை, இதுபோல் மது குடித்தால் மேலோகத்திற்கு அனுப்பி விடுவேன் என கூறினார். அதற்கு இனிமேல் மதுவிற்கு அடிமையாக மாட்டேன் என போலீஸ் ஏட்டு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் போலீசார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


Next Story