சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுரை
சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க பொதுமக்களுக்கு காவல்துறையினா் அறிவுரை வழங்கி உள்ளனா்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், சைபர் குற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க 15 நாட்களுக்கு ஒருமுறை தங்களது செல்போன், மடிக்கணினி, கணினி ஆகியவற்றின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டும். அதுபோல் இணையதளம், நெட்பேங்கிங், கூகுள்பே, பேடிஎம் ஆகியவற்றின் கடவுச்சொல்லையும் அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும். மேலும் யாரேனும் தங்களிடம் ஓ.டி.பி. அல்லது கே.ஒய்.சி. போன்ற தகவல்களை கேட்டால் அதனை கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. தாங்கள் உள்ளீடு செய்யும் கடவுச்சொல் மிகவும் உறுதித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தப்பிக்கலாம். இந்த தகவல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story