பஸ்சுக்கு காத்திருந்த மாணவிகளுக்கு போலீசார் ஆலோசனை
கண்ணமங்கலத்தில் பஸ்சுக்கு காத்திருந்த மாணவிகளுக்கு போலீசார் ஆலோசனை
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் பள்ளி முடிந்து சொந்த ஊருக்கு செல்ல பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்தனர்.
அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கும்பலாக நின்றிருந்த மாணவிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க ஆலோசனைகள் வழங்கினார்.
அதன்படி பள்ளிக்கு வரும்போது யாரேனும் உங்களிடம் வழிமறித்து தொந்தரவு கொடுத்தால் போலீசில் புகார் செய்யவேண்டும்.
புகார் செய்தவரின் நலன் பாதுகாக்கப்படும். மேலும் மாணவிகளான உங்களிடம் யாரேனும் பாலியல் தொந்தரவோ, கிண்டல் செய்து வம்பிழுத்தாலோ அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,
மேலும் தைரியமாக இருக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Related Tags :
Next Story