வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு


வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பஸ்நிலையத்தில் வாடகை டாக்சி ஓட்டுனர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசும் போது, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும். ஹெல்மெட் அணிவதால் விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுகிறது. சீட் பெல்ட் கண்டிப்பாக அணிய வேண்டும். மேலும் அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் கூடுதல் பாரம் ஏற்றி செல்லக்கூடாது. குடிபோதையில் வாகனங்களை இயக்கக் கூடாது. புதிய போக்குவரத்து திருத்த சட்டத்தின்படி போக்குவரத்து விதி மீறல்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி அபராதம் செலுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று விளக்கினார்கள்.


Next Story