குழந்தை தொழிலாளர் முறை குறித்து மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு


குழந்தை தொழிலாளர் முறை குறித்து மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 24 Jun 2023 2:30 AM IST (Updated: 24 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் குழந்தை தொழிலாளர் முறை குறித்து மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சார்பில் குழந்தை தொழிலாளர்கள் முறை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதையடுத்து குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து போலீசார் விளக்கமளித்தனர்.

மேலும் பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அதுமட்டுமின்றி போலீசார் உதவி எண்ணான 1098 குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தனிபிரிவு போலீஸ்காரர் ராஜேஷ்குமார் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story