கோத்தகிரியில் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு


கோத்தகிரியில் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
x

கோத்தகிரியில் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினா்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விபத்துகளை தவிர்க்கும் வகையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை வழியாக செல்லும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப் -இன்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினா். வாகன ஓட்டுனர்கள் தாழ்வான மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் போது 2-வது கியரில் பாதுகாப்பாக இயக்க வேண்டும். அதி வேகத்தில் வாகனங்களை இயக்கக் கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினா். மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர், பயணம் செய்யும் போது ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும். ஹெல்மெட் அணிவதால் விபத்துகள் ஏற்பட்டாலும் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்படுகிறது. மேலும் அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். குடிபோதையில் வாகனங்களை இயக்கக் கூடாது என விளக்கிக் கூறி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினா்.



Next Story