பழங்குடியினர்களுடன் போலீசார் பொங்கல் கொண்டாட்டம்
பழங்குடியினர்களுடன் போலீசார் பொங்கல் கொண்டாடினர்.
நீலகிரி
குன்னூர்,
தமிழகம் முழுவதும் கடந்த 15-ந் தேதி பொங்கல் பண்டிகை ேகாலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த பம்பாலகொம்பை பழங்குடியின கிராமத்தில், போலீசார் பழங்குடியின மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடினர். அப்போது பழங்குடியின குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மேலும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை இருந்தாலோ, வேறு ஏதாவது பிரச்சினை இருந்தாலும் போலீஸ் நிலையத்தை அணுகலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் தெரிந்தாலும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story