கும்பகோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
கும்பகோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
தஞ்சாவூர்
பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கோவில்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கும்பகோணம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின் பேரில் கும்பகோணம் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபாகரன், மகாதேவன் ஆகியோர் மேற்பார்வையில், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் நேற்று காலை கும்பகோணம் ெரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ெரயில் பயணிகள் கொண்டு வந்த உடமைகள் சோதனை செய்யப்பட்டு பின்னர் ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story