திருவண்ணாமலையில் ஏ.டி.எம். மையங்களில் துணிகர கொள்ளை: குமரியில் போலீசார் தீவிர வாகன சோதனை

திருவண்ணாமலையில் ஏ.டி.எம். மையங்களில் துணிகர கொள்ளை: குமரியில் போலீசார் தீவிர வாகன சோதனை
x

திருவண்ணாமலையில் ஏ.டி.எம். மையங்களில் ரூ.72½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து குமரியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

திருவண்ணாமலையில் ஏ.டி.எம். மையங்களில் ரூ.72½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து குமரியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களை உடைத்து ரூ.72½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஆந்திரா, கர்நாடகா அல்லது திருச்சி, மதுரை, கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

குமரியில் தீவிர வாகன சோதனை

அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் உப கோட்டத்தில் உள்ள கோட்டார், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் நேசமணி நகர் போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.

Next Story