நுகர்பொருள் வாணிப கழக குடோனில் போலீசார் திடீர் ஆய்வு


நுகர்பொருள் வாணிப கழக குடோனில் போலீசார் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

ஆய்வு

மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா அறிவுரையின் பேரில், விருதுநகர் சரக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில், தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்.அனுராதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

விழிப்புணர்வு

அந்த குடோனில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளிகள் ஆகியோரிடம் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக ஏதேனும் புகார்கள் இருந்தால் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீசாரின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது தொடர்பாக துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்கள் கூடும் இடங்களிலும் துண்டு பிரசுரங்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story