ரேஷன் அரிசி குடோனில் போலீசார் திடீர் சோதனை
மயிலாடுதுறையில் ரேஷன் அரிசி குடோனில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
மயிலாடுதுறையில் ரேஷன் அரிசி குடோனில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
ஆய்வு
தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில், திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுரையின் பேரில், மயிலாடுதுறை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் மற்றும் போலீசார் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகள் மற்றும் ரேஷன் கடைகளில் சோதனை நடத்தினர்.
முன்னதாக மயிலாடுதுறை அருகே சித்தர்க்காட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
எச்சரிக்கை
இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசன் கூறியதாவது, ரேஷன் அரிசி விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து சீர்காழி அருகே உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோன்று பல்வேறு ரேஷன் கடைகளிலும் போலீசார் ஆய்வு மேற்கண்டனர்.