பொதுமக்களிடம் மனு வாங்கிய போலீஸ் டி.ஐ.ஜி.


பொதுமக்களிடம் மனு வாங்கிய போலீஸ் டி.ஐ.ஜி.
x

திண்டுக்கல்லில் நடந்த குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்களிடம் இருந்து டி.ஐ.ஜி. மனுக்களை வாங்கினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாத கோரிக்கை தொடர்பாக மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட டி.ஐ.ஜி., சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story