ஒடிசா மாநில தொழிலாளர்களுடன் போலீசார் கலந்துரையாடல்


ஒடிசா மாநில தொழிலாளர்களுடன் போலீசார் கலந்துரையாடல்
x

தாடிக்கொம்பு அருகே நூற்பாலையில் பணிபுரியும் ஒடிசா மாநில தொழிலாளர்களுடன் போலீசார் கலந்துரையாடினர்.

திண்டுக்கல்

தாடிக்கொம்பு அருகே உள்ள தனியார் நூற்பாலையில் தங்கியிருந்து, ஒடிசா மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் தாடிக்கொம்பு போலீசார் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில், ஏட்டுக்கள், முருகன், சுரேஷ் ஆகியோர் தொழிலாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

அப்போது தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தை அணுகலாம் என்றும், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலா வரும் போலி வீடியோக்களை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர். மேலும் உள்ளூர் மக்களோடு நல்ல நட்புடன் பழக வேண்டும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

-----


Next Story