போலீசார் உடற்பயிற்சி


போலீசார் உடற்பயிற்சி
x

பாபநாசம் மலைப்பகுதியில் போலீசார் உடற்பயிற்சி செய்தனர்

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் மலைப்பகுதியில் போலீசார் உடற்பயிற்சி செய்தனர். விக்கிரமசிங்கபுரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட போலீசார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் நேற்று காலை நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டனர். அம்பை துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பாபநாசம் வன சோதனை சாவடியில் இருந்து லோயர் டேம் வரை நடைபயிற்சியில் ஈடுபட்டனர். லோயர் டேம் பகுதியில் உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டனர். இப்பயிற்சி வாரம் தோறும் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறுவதாக துைண சூப்பிரண்டு பிரான்சிஸ் தெரிவித்தார்.


Next Story