பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 5 ஆயிரம் பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியினா் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து உள்ளனா்.
சென்னை,
தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று கோட்டையை நோக்கி பேரணி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டா்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் கோட்டையை நோக்கி கோஷங்கள் எழுப்பியபடியே பேரணியாக சென்றனர். அப்போது தடுப்புகள் அமைத்து காத்திருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினா்.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 5 ஆயிரம் பேர் மீது சென்னை எழும்பூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து உள்ளனா். சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசாா் வழக்குப்பதிவு செய்து உள்ளனா்.