போலீஸ் கொடி அணிவகுப்பு


போலீஸ் கொடி அணிவகுப்பு
x

விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருநெல்வேலி

விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு அமைப்புகள், தங்களது பகுதிகளில் விநாயகர் சிலைகளை அமைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். சில நாட்கள் கழித்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து, ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

போலீஸ் அணிவகுப்பு

இந்த நிலையில் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். இதையொட்டி நேற்று மாலை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு பாளையங்கோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்படும் பகுதிகளான பாளையங்கோட்டையில் உள்ள சிவன் கோவில் முன்பு தொடங்கி முக்கிய வீதிகளான தெற்கு பஜார், முருகன் குறிச்சி, திருவனந்தபுரம் ரோடு, வண்ணார்பேட்டை வழியாக விநாயகர் சிலை கரைக்கும் பகுதியான பேராட்சி அம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.

இந்த அணிவகுப்பில் பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அதிகாரிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story