மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம்
ஆண்டுதோறும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது வழக்கம்.அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்திலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உடைமைகள் சோதனை
நேற்று மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொதுமக்கள் கொண்டு வந்த உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதே போல ரெயில்களிலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.