வசூலித்த பணத்துடன் தலைமறைவு: நிதி நிறுவன ஊழியருக்கு வலைவீச்சு


வசூலித்த பணத்துடன் தலைமறைவு: நிதி நிறுவன ஊழியருக்கு வலைவீச்சு
x

வசூலித்த பணத்துடன் தலைமறைவான நிதி நிறுவன ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை

வசூலித்த பணத்துடன் தலைமறைவான நிதி நிறுவன ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நிதி நிறுவன ஊழியர்

மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகையை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது37). இவர் மயிலாடுதுறை நகரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள கீழமருதாந்தநல்லூர் பகுதியை சேர்ந்த சரவணமூர்த்தி என்பவர் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் ஊழியராக கடந்த 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரவணமூர்த்தி பணிக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். இந்த நிலையில் அவர் தனியார் நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 38 பேரிடம் இருந்து வசூல் செய்த தொகையை நிறுவனத்தில் செலுத்தாததுடன், வாடிக்கையாளர்களுக்கும் ரசீது வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலீசில் புகார்

இதுகுறித்து வசந்தகுமார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சரவணமூர்த்தி மீது புகார் அளித்தார். அந்த புகாரில், நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் 38 பேரிடம் இருந்து பணம் வசூல் செய்ததற்கான ரசீது தராமல், பணத்தையும் நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் சரவணமூர்த்தி தலைமறைவாகி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து சரவணமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story