புழல் சிறையில் அடைக்கப்பட்ட போலந்து நாட்டுக்காரரிடம் வேதாரண்யம் போலீசார் 3 நாட்கள் விசாரணை


புழல் சிறையில் அடைக்கப்பட்ட  போலந்து நாட்டுக்காரரிடம் வேதாரண்யம் போலீசார் 3 நாட்கள் விசாரணை
x

போலந்து நாட்டுக்காரரிடம் வேதாரண்யம் போலீசார் 3 நாட்கள் விசாரணை நடைபெற உள்ளது.

நாகப்பட்டினம்

புழல் சிறையில் அடைக்கப்பட்ட போலந்து நாட்டுக்காரரிடம் வேதாரண்யம் போலீசார் 3 நாட்கள் விசாரணை நடத்த உள்ளனர்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட படகு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் கடந்த 24-ந் தேதி ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இந்த படகு சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த படகில் வந்தவர் போலந்து நாட்டை சேர்ந்த வாத்திஸ்வாப் (வயது 40) என்பதும், இலங்கையில் இருந்து அவர் படகு மூலம் இங்கு வந்ததும் தெரியவந்தது. ஆறுகாட்டுத்துறையில் பதுங்கி இருந்த அவரை பாஸ்போர்ட் இல்லாமல் தமிழகம் வந்ததாக கூறி போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக அவரிடம் மத்திய உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

காவலில் எடுத்து விசாரணை

இந்த நிலையில் வேதாரண்யம் போலீசார் வாத்திஸ்வாப்பை சென்னை புழல் சிறையில் இருந்து காவலில் எடுத்து உள்ளனர். அவரிடம் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை 3 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

இதை முன்னிட்டு அவரை வேதாரண்யம் போலீசார் புழல் சிறையில் இருந்து வேதாரண்யம் அழைத்து வந்தனர்.


Next Story