தனுஷ்கோடி கடற்கரையில் பெண் எலும்புக்கூடு


தனுஷ்கோடி கடற்கரையில் பெண் எலும்புக்கூடு
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கடற்கரையில் பெண் எலும்புக்கூடு கிடந்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனுஷ்கோடி போலீசார் அங்கு சென்று எலும்புக்கூடை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அது பெண்ணின் எலும்புக்கூடு என தெரியவந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story