சீல் வைத்தது போன்று அம்மன் கோவிலை பூட்டியது யார்?


சீல் வைத்தது போன்று அம்மன் கோவிலை பூட்டியது யார்?
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீல் வைத்தது போன்று அம்மன் கோவிலை பூட்டியது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே அருவி உள்ளதால் எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கும் வந்து ராக்காச்சி அம்மனை தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவில் பூசாரி ராக்கப்பன் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றார். மீண்டும் நேற்று காலை வந்து பார்த்தபோது ராக்காச்சி அம்மன் கோவில் கதவில் சீல் வைத்தது போல் பூட்டு போடப்பட்டு துணி சுற்றப்பட்டு இருந்தது. இதுகுறித்து பூசாரி ராக்கப்பன் மம்சாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோவிலுக்கு பூட்டு போட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story