மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி மாயம்


மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி மாயம்
x

மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் குருகுலம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கும்பாபிஷேகத்தை காண உதினிப்பட்டியை சேர்ந்த பாப்பு (வயது 75) என்ற மூதாட்டி வந்தார். இதையொட்டி கூட்ட நெரிசலில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க செயினை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மூதாட்டி பாப்பு கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story