போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி இன்று தொடக்கம்
போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி இன்று தொடங்குகிறது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை ரோட்டில் கிருஷ்ணன் கோவில் மலை அடிவாரத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் உள்ளது. இங்கு போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொள்வார்கள். இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது. மலை அடிவாரப்பகுதியில் இந்த பயிற்சி நடைபெறும் பொழுது துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் பயங்கரமாக இருக்கும். மேலும் இப்பகுதியில் சிறுவர்கள் விளையாட வரவோ, மக்கள் யாரும் அடிவாரப்பகுதியில் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மலை அடிவாரப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்கு யாரும் இப்பகுதிக்கு வர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story