பைக்கில் எடுத்து சென்ற ரூ.1.27 கோடி பணம் பறிமுதல் - வருமானவரி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு


பைக்கில் எடுத்து சென்ற ரூ.1.27 கோடி பணம் பறிமுதல் - வருமானவரி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
x

சென்னை அண்ணாசாலை அருகே பைக்கில் ரூ.1.27 கோடி பணத்தை எடுத்து சென்ற 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

சென்னை

சென்னை:

சென்னை அண்ணாசாலை, பெரியார் சிலை அருகில் இன்று காலை 10 மணி அளவில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அங்கு பைக்கில் வந்த 2 பேரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பைக்கில் வந்தவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதற்குள் ரூ.1.27 கோடி பணம் இருந்தது.அந்த பணத்தை நிலம் வாங்குவதற்கு முன்பணமாக கொடுக்க எடுத்து செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அந்த பணத்திற்கு அவர்களிடம் முறையான கணக்கு இல்லை. இதனால் போக்குவரத்து போலீசார், இணை கமிஷனர் ராஜேந்திரன் மூலமாக வருமானவரி அதிகாரிகளிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர்.

வருமானவரி அதிகாரிகள் பணம் கொண்டு வந்த 2 பேரையும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story