போலீசாரின் அணிவகுப்பு ஊர்வலம்
போலீசாரின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது
மயிலாடுதுறை
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாயொட்டி மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது. இந்த அணிவகுப்பு ஒத்திகையில் 150 போலீசார் கலந்து கொண்டு வாள், துப்பாக்கி ஏந்தி கம்பீரமாக நடந்து வந்தனர். இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உடன் இருந்தார். இதனைத்தொடர்ந்து சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. கிட்டப்பா அங்காடி அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்திஜி சாலை, பட்டமங்கல தெரு வழியாக கால்டெக்ஸ் சந்திப்பில் முடிவடைந்தது.
Related Tags :
Next Story