போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை


போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:47 PM GMT)

குடியரசு தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர்

இந்திய குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 8.15 மணி அளவில் குடியரசு தின விழா நடக்கிறது. இவ்விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைக்க உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் முற்றிலும் இல்லாததால், விழாவை சிறப்பாக நடத்தும் வகையில், விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் முன்னிலையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது. மேலும் போலீசார் அண்ணா விளையாட்டு மைதானம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Next Story