போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி


போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி நடந்தது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பால் பண்ணை விளையாட்டு மைதானத்தில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி நடந்தது. மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் முதலில் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலைய அணியினரும், குலசை சூப்பர் கிங்ஸ் அணியினரும் மோதினர். இதில் குலசை அணியினர் வெற்றி பெற்றனர்.

அடுத்ததாக நடந்த போட்டியில் மணியாச்சி உட்கோட்ட போலீஸ் அணியினரும், பச்சைபெருமாள்புரம் அணியினரும் மோதினர். இதில் மணியாச்சி போலீஸ் அணியினர் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் வைத்து பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவில் மணியாச்சி துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், எபினேசர் மற்றும் போலீசார், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.


Next Story