ரெயிலில் கஞ்சா கடத்துவதை தடுக்க போலீசார் சோதனை


ரெயிலில் கஞ்சா கடத்துவதை தடுக்க போலீசார் சோதனை
x

அரக்கோணத்தில் ரெயிலில் கஞ்சா கடத்துவதை தடுக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் தீவிர சோதனையை மேற்கொள்ள ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி அகிய ரெயில் நிலையங்கள் வழியாக வந்து செல்லும் ரெயில்களிலும், ரெயில் நிலையத்திலும் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story