ஆன்லைன் பண மோசடியில் இழந்த ரூ.15 லட்சம் போலீசாரால் மீட்பு
ஆன்லைன் பண மோசடியில் இழந்த ரூ.15 லட்சம் போலீசாரால் மீட்கப்பட்டது.
விருதுநகர்
சிவகாசியை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி அவரிடம் இருந்து பல தவணைகளாக ரூ.7 லட்சத்து 27 ஆயிரத்து 400-யையும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சுதாகரன் என்பவரிடமிருந்து மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனக் கூறி ரூ. 3 லட்சத்து 20 ஆயிரத்தையும், அருப்புக்கோட்டையை சேர்ந்த தர்மராஜ் என்பவரிடம் கிரிப்டோகரன்சி மூலம் பணம் ஈட்டலாம் என கூறி ரூ. 1 லட்சத்து 4,400 உள்பட மேலும் 9 பேரிடம் ஆன்லைனில் மர்ம நபர்கள் ரூ. 15 லட்சத்து 46 ஆயிரத்து 531-ஐ மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பணத்தை மீட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பணத்தை இழந்தவர்களிடம் இழந்த பணத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
Related Tags :
Next Story