காணாமல் போன சிறுவனை ½ மணி நேரத்தில் மீட்ட போலீசார்
நாட்டறம்பள்ளி அருகே காணாமல் போனசி றுவனை ½ மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த தோப்புல குண்டா பூசாரி வட்டம் பகுதியில் வசிப்பவர் வினோத் குமார். இவரது மனைவி பிரியா. இருவரும் தங்களுடைய 2 வயது குழந்தை பிரேம்குமாருடன் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது குழந்தை பிரேம்குமார் காணாமல் போய்விட்டான். உடனே அந்தப்பகுதியில் குழந்தையை தேடிக் கொண்டிருந்தபோது, பா.ஜ.க. கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோரிடம் குழந்தை காணாமல் போனது பற்றி தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசாரை வரவழைத்து நாட்றம்பள்ளி- திருப்பத்தூர் வழியாக செல்லும் பாலத்தின் அருகே குழந்தை தனியாக அழுது கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடிது மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த குழந்தை எப்படி அங்கு சென்றது, குழந்தை கடத்தும் கும்பல் கைவரிசையா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தை காணாமல் போன அரை மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.