சாராயம் கடத்தியவர்களுக்கு வலை வீச்சு
சாராயம் கடத்தியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி அருகே உள்ள வெள்ளத்திடல் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை நடத்தினர். இதில் அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் 6 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் விட்டு சென்ற 330 லிட்டர் சாராயம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story