தனியார் பஸ் நிறுவனத்தின் வாகனங்கள் பறிமுதல்


தனியார் பஸ் நிறுவனத்தின் வாகனங்கள் பறிமுதல்
x

தனியார் பஸ் நிறுவனத்தின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தனியார் பஸ் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கமாலுதீன் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டார்கள் பலரும் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டனர்.இதுதொடர்பான வழக்கை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அய்யம்பேட்டை ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனியார் பஸ் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ்கள், கார், வேன், டிராக்டர் உள்ளிட்ட 19 வாகனங்களை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேசி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து தஞ்சைக்கு கொண்டு சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story