தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு
தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு
தஞ்சாவூர்
ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்தியஅரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் பீகார், இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாவட்டங்களில் ராணுவ வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் ரெயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இரும்புமுள் கம்பிகளால் ஆன தடுப்புகளையும் வரிசையாக போலீசார் வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story