கோவையில் கோவில், மசூதிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு
கோவையில் கோவில், மசூதிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்து மர்ம நபர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து நகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் கொள்முதல் செய்ய வந்தவர்கள் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அறிந்ததும் கலக்கம் அடைந்தனர். கடைகளில் கூட்டமாக செல்வதை தவிர்த்தனர்.
இந்த சம்பவம் காரணமாக கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்குள் நுழைய முடியாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டது. இதனால் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் செல்ல முடியாமல் திரும்பிச்சென்றனர். இதேபோல் நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இது போல் கோவை நகரில் உள்ள மசூதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story