நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
நாமக்கல்
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள கவுண்டிபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் பூபாலன் (வயது 23). இவர் பி.எஸ்சி. முடித்து விட்டு ரிக் வண்டியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரும், அணியார் கொளந்தாபாளையத்தை சேர்ந்த உதயசங்கர் மகள் பிரியதர்ஷினி (19) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பிரியதர்ஷினி திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோடு ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து நல்லூர் போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து பேசி பூபாலன் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story