ரூ.5 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட போலீஸ் நிலைய கட்டிடம்
கண்ணமங்கலத்தில் ரூ.5 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட போலீஸ் நிலைய கட்டிடம்
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் போலீஸ் நிலைய கட்டிடம் ரூ.5 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இதனால் தற்காலிகமாக போலீஸ் நிலையம் கண்ணமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டிடத்தில் இடமாற்றம் செய்து செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் புனரமைக்கப்பட்ட போலீஸ் நிலைய கட்டிடம் திறப்பு விழா இன்று நடந்தது. இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா வரவேற்றார்.
ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
விழாவில் கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமிகோவர்த்தனன் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றினார்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் காட்டுக்காநல்லூர் ரேணு, கொங்கராம்பட்டு சுகுணா நாராயணன், 5 புத்தூர் தேவமணி ஜம்பு, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள்சீனிவாசன், துணை தலைவர் ஆ.வேலாயுதம்,
ஒன்றிய கவுன்சிலர்கள் குமாரராஜா, கீதாமோகன், துணை தலைவர்கள் மாதவன், சுகுணாதுரை, மற்றும் கண்ணமங்கலம் பகுதி வியாபாரிகள் சரவணன், ராஜூ, கே.டி.குமார், முன்னாள் தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் வெள்ளைகணேசன், அன்பரசு, கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேந்திரன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கணபதி ஹோமத்துடன் யாகபூஜைகளும் நடைபெற்றது.
முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் நன்றி கூறினார்.