போலீஸ்-மாணவர்கள் கலந்துரையாடல்
சுரண்டை அரசு கலைக்கல்லூரியில் போலீஸ்-மாணவர்கள் கலந்துரையாடல் நடத்தினர்.
சுரண்டை:
சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகளிடையே சமுதாயத்தில் நல்லுறவை வளர்க்கும் வகையில் போலீஸ்-மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் அ.பீர்கான் தலைமை தாங்கினார். தமிழ் துறை தலைவர் திருநாவுக்கரசு, ஆங்கிலத்துறை தலைவர் மு.மோகன கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு சகாயஜோஸ், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி, சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தினர்.
ஆலங்குளம் துணை சூப்பிரண்டு சகாய ஜோஸ் மாணவ- மாணவிகளிடையே பேசும்போது, மாணவ- மாணவிகள் படிக்கும் காலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதோடு நட்புறவோடு உதவி செய்யவும் காவல்துறை எப்பொழுதும் தயாராக உள்ளது. எனவே மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம், என்றார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.