போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி: சேலத்தில் 2-வது நாளாக உடற்தகுதி தேர்வு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி: சேலத்தில் 2-வது நாளாக உடற்தகுதி தேர்வு
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு சேலத்தில் 2-வது நாளாக உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் 41 பெண்கள் தேர்வாகினர்.

சேலம்

உடற்தகுதி தேர்வு

தமிழக காவல்துறையில் புதிதாக 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 413 பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

அப்போது, தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு உயரம் அளவீடு செய்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதன் முடிவில், முதல் நாளில் 284 பெண்கள் கலந்து கொண்டதில் 248 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

41 பேர் தேர்ச்சி

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு 171 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் 168 பெண்கள் மட்டும் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதனை போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்தனர். 41 பேர் மட்டும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story