நீடாமங்கலத்தில் காவல் உட்கோட்டம் அமைக்க வேண்டும்
நீடாமங்கலத்தில் காவல் உட்கோட்டம் அமைக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலத்தில் காவல் உட்கோட்டம் அமைக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரம் நீடாமங்கலம். நீ்டாமங்கலம் தாலுகாவின் தலைநகராகவும் உள்ளது. இங்கு சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மத்திய- மாநில அரசு அலுவலகங்களும் இங்கு உள்ளன. நீடாமங்கலத்தில் நீதிமன்றம், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. சில்லறை வியாபார கடைகள் உள்ளிட்ட சுமார் 300- க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. நீடாமங்கலம் தாலுகாவில் நீடாமங்கலம், வடுவூர், கொரடாச்சேரி ஆகிய வருவாய் வட்டங்கள் உள்ளன.
விரைவு ரெயில்கள்
நீடாமங்கலம் நகரில் அரசு மற்றும் தனியார் கல்விநிறுவனங்கள், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோவில் வெண்ணியில் பொறியியல் கல்லூரி உள்ளது. நீடாமங்கலம் ெரயில் நிலையம் வழியாக சென்னை, கோவைக்கு நாள்தோறும் விரைவு ெரயில்கள் இயக்கப்படுகிறது.இது தவிர வாராந்திர ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு வந்து செல்கிறது. மேலும் பெங்களூருவில் இருந்து விரைவு ெரயில் நீடாமங்கலம் வழியாக வேளாங்கண்ணி சென்று வருகிறது.நாள்தோறும் பயணிகள் ெரயில்கள், சரக்கு ெரயில்கள் நீடாமங்கலம் வழியாக சென்று வருகின்றன. மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் பஸ்கள், வேன்கள், கார்கள், லாரிகள், இதர கனரக வாகனங்கள் சென்று வருகிறது.
துணை போலீஸ் சூப்பிரண்டுகள்
நீடாமங்கலம் வட்டத்தில் நீடாமங்கலம், தேவங்குடி, வடுவூர் போலீஸ் நிலையங்கள் தற்போது மன்னார்குடி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த காவல் சரக பகுதிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டால் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.மேலும் கொரடாச்சேரி காவல் நிலையமும் நீடாமங்கலம் தாலுகாவில் உள்ளது. இங்குள்ள பிரச்சினைகளை திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அதிக பணிச்சுமை ஏற்படுகிறது.
காவல் உட்கோட்டம்
நீடாமங்கலம் பகுதியில் இருவழிச்சாலைத்திட்டம், பல்வேறு கிராமங்களை நகர பகுதிகளோடு இணைக்கும் இணைப்பு பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.கோர்ட்டு உள்ள ஊரில் காவல் உட்கோட்டம் அமைவது அவசியம். எனவே குற்றங்களை தடுக்கும் வகையில் நீடாமங்கலம், தேவங்குடி, கொரடாச்சேரி, அரித்துவாரமங்கலம், வலங்கைமான், வடுவூர் ஆகிய ஊர்களில் உள்ள போலீஸ் நிலையங்களை உள்ளடக்கி நீடாமங்கலத்தில் காவல் உட்கோட்டம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.