துணை தாசில்தார்களுக்கு காவல்துறை பயிற்சி
துணை தாசில்தார்களுக்கு காவல்துறை பயிற்சி அளிக்கப்படுகிறது.
விருதுநகர்
மாவட்டத்தில் 8 துணைத்தாசில்தார்களுக்கு வருகிற 10-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை காவல்துறை பயிற்சிக்கு செல்ல அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலக தலைமை உதவியாளர் இந்திரா, மாவட்ட வழங்கல் அலுவலக துணை தாசில்தார் சோனையன், வத்திராயிருப்பு தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் சசிகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் நிர்மல் குமார், வத்திராயிருப்பு தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் கலைச்செல்வி, கலெக்டர் அலுவலக ஜே பிரிவு தலைமை உதவியாளர் பால்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜேந்திரன், விருதுநகர் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் முத்து சங்கரன் ஆகியோர் காவல்துறை பயிற்சிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story