வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி


வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி
x

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணி வழிகாட்டுதலின்படி, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் பேரிடர் காலங்களில் வெள்ளம் போன்ற விபத்துகளில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்று 60 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 2-வது நாளான நேற்று போலீசாருக்கு இரூர் கல்குவாரி குட்டையில் பாதுகாப்பு ஒத்திகை செயல் விளக்கமாக அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கமாண்டர் பிரிவை சேர்ந்த குழுவினர் இந்த செயல் விளக்க பயிற்சி அளித்தனர். அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், ரப்பர் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story