போலீசார் வாகன சோதனை: ரூ.34 லட்சம் கஞ்சா, புகையிலை பொருட்கள் சிக்கியது; 5 பேர் கைது
மதுரை நகரில் வாகன சோதனையின் போது ரூ.34 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தி சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை நகரில் வாகன சோதனையின் போது ரூ.34 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தி சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா கடத்தல்
மதுரை நகரில் கஞ்சா, புகையிலை, பாக்கு போன்ற போதை பொருட்களை கடத்தல், விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கஞ்சா கடத்தல், விற்பனையை தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கோச்சடை பகுதியில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமயில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினா். அவர்களிடம் விசாரித்த போது வாடிப்பட்டியை சேர்ந்த குபேந்திரன்(வயது 31), மேலஅனுப்பானடியை சேர்ந்த பெரியண்ணகுமார்(29) என்பதும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை மறைத்து கொண்டு கடத்தி செல்வதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சிக்கினர்
இதேபோன்று ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் காரில் இருந்தவர்களை விசாரித்த போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோகர்சிங்(42), கிருஷ்ணகிரியை சேர்ந்த பூபதி(21), தர்மபுரியை சேர்ந்த கவுதம் (23) என்பதும், காரில் புகையிலை, பாக்கு போன்றவற்றை கடத்தி செல்வதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் காரை கைப்பற்றி அதிலிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள 612 கிலோ புகையிலை, பாக்கு போன்ற பொருட்களை பறிமுதல் ெசய்தனர்.
போலீஸ் கமிஷனர் பாராட்டு
இந்த இரு சம்பவங்களில் விரைந்து செயல்பட்டு சுமார் ரூ.34 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, புகையிலை பொருட்களை கைப்பற்றி நடவடிக்கை எடுத்த எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன், ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்தார். அப்போது துணை கமிஷனர்கள் சாய்பிரனீத், அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர்.