நண்பனை அடித்து கொலை செய்த வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


நண்பனை அடித்து கொலை செய்த வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x

குன்னம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை அடித்து கொலை செய்த வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

தகராறு

பெரம்பலூர் மாவட்டம், சிறுகுடல் நடுத் தெருவை சேர்ந்தவர் மணி(வயது 38). இவர் கடந்த 24-ந் தேதி இரவு தனது நண்பர்களான துறைமங்கலத்தை சேர்ந்த மற்றொரு மணியின் மகன் மனோஜ்(30), பாலம்பாடியை சேர்ந்த ஆண்டிமுத்துவின் மகன் அழகுதுரை(35) ஆகியோருடன் பெரம்பலூர்-அருமடல் பிரிவு சாலையில் உள்ள டாஸ்மாக்கடை அருகே மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது போதையில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட அடிதடி தகராறில் மனோஜ், அழகுதுரை ஆகியோர் ஒன்று சேர்ந்து மணியை அடித்து கீழே தள்ளியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த மணியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மணியின் மனைவி பானுப்பிரியா மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இதனை கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான மனோஜ், அழகுதுரை ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். மணி மீது ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story