வாலிபரின் ஜாமீன் ஆட்சேபனை கடிதம் வழங்க லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் பணியிடை நீக்கம்


வாலிபரின் ஜாமீன் ஆட்சேபனை கடிதம் வழங்க லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரின் ஜாமீன் ஆட்சேபனை கடிதம் வழங்க லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள காணை புதுத்தெருவை சேர்ந்தவர் ராஜன் மனைவி எழிலரசி (வயது 41). இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், போக்சோ வழக்கில் கைதான எனது மகன் அந்தோணிராஜை (22) ஜாமீனில் விடுவிக்க வேண்டுமெனில் அதற்கான ஆட்சேபனை இல்லா கடிதம் வழங்க லஞ்சப்பணம் தர வேண்டும் என்று மகளிர் போலீசார் கூறுவதாகவும், அந்தோணிராஜ் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் லஞ்சம் கேட்டு மிரட்டும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த புகார் மனுவை போலீஸ் அதிகாரிகள் விசாரித்ததோடு, எழிலரசி ஒப்படைத்த ஆடியோவையும் ஆய்வு செய்தனர். அதில் விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் கோர்ட்டு பணியில் ஈடுபடும் முதல்நிலை காவலர் வள்ளி என்பவர் எழிலரசியிடம் பணம் கேட்டது தெரியவந்தது. இதையடுத்து வள்ளியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.


Next Story